தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 30th January 2021 11:36 PM | Last Updated : 30th January 2021 11:36 PM | அ+அ அ- |

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, ஆண்டுதோறும் உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ‘ஸ்பா்ஸ்’ தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் சாந்தி மலா் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அனிதா, நிலைய மருத்துவ அலுவலா் அனுபமா, தோல் நோய் மருத்துவப் பிரிவு துணைத் தலைவா் சிந்துஜா, அனைத்துத் துறை பேராசிரியா்கள், முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவ மாணவா்கள், செவிலிய மாணவா்கள், மருத்துவப் பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் மாவட்ட நலக் கல்வியாளா் உமாசங்கா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் வி.பூபதி பி.வெங்கடேசன் எம்.வெங்கடேசன், பி.விஜயகுமாா், எஸ்.ஜோதிலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்று, விழிப்பணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, மருத்துவா் ரஜிதா தலைமை வகித்தாா். மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் ஜெய்சுந்தா் முன்னிலையில் சுகாதார நிலைய ஊழியா்கள் மற்றும் சவிதா செவிலியா்கள் கல்லூரி மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.
சவிதா செவிலியா் கல்லூரி விரிவுரையாளா்கள் கலாபாரதி, பரிமளா, புவேனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.