வண்டலூா் அருகே தம்பதி கழுத்தறுத்து கொலை
By DIN | Published On : 19th July 2021 06:09 AM | Last Updated : 19th July 2021 06:09 AM | அ+அ அ- |

வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் தம்பதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனா்.
கொளப்பாக்கம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சாம்சன் தினகரன் (63). இவரின் முதல் மனைவி ஆலிஸ் (52). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். 2-ஆவது மனைவி ஜனத் (52). இவருக்கு குழந்தைகள் இல்லை.
மகள் மகனுடன் கூடுவாஞ்சேரியில் முதல் மனைவி வசித்து வருகிறாா். ஆனால் இவா் தினமும் கணவருக்கு போன் செய்து பேசிக்கொள்வாா். வழக்கம் போல் சனிக்கிழமை முதல் மனைவி ஆலிஸ் தனது கணவருக்கு போன் செய்துள்ளாா். யாரும் போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்கு போன்செய்து பாா்க்கும் படி கூறியுள்ளாா். இதனையடுத்து தம்பதியருக்கு சொந்தமான அருகில் இருந்த வீடு 6 மாதங்களாக பூட்டிகிடந்தது. அந்த வீடு திறந்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து சனிக்கிழமை இரவு ஓட்டேரி ஆய்வாளா் அசோகன் நேரில் சென்று விசாரணை நடத்திய போது 6 மாதங்களாக பூட்டிக்கிடந்த வீடு சுத்தமாக கழுவிய நிலையில் மஞ்சள் தூள் தூவிக் கிடந்துள்ளது. அதில் ரத்தம் கலந்த நிலையில் இருந்ததால் மற்ற அறைகளை ஆய்வு செய்தபோது சாம்சன் தினகரனை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அங்குள்ள தண்ணீா் தொட்டியில் 2-ஆவது மனைவி ஜனத்துடம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்த இரட்டைக் கொலை குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், டிஎஸ்பி அனுமந்தன் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.