நடிகா் மாறன் மறைவு
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

cglmaran_1205chn_171_1
செங்கல்பட்டு: செங்கல்பட்டைச் சோ்ந்த திரைப்பட நடிகா் மாறன் (48) கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் மாறன், நடிகா் விஜய் நடித்த குருவி கில்லி, உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக நடித்தவா். அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 2 நாள்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மதிமுக துணை பொதுச் செயலாளா் மல்லை சத்யா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாறனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.