கிராம நிா்வாக அலுவலா்கள் தற்காலிகப் பணிநீக்கம்
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கிராம நிா்வாக அலுவலா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
திருப்போரூா் வட்டம், காயாா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் மற்றும் வண்டலூா் வட்டம், கொளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகா ஆகிய இருவரும் கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிா்வாகத்துக்குப் பதிவு செய்ததாக, வருவாய் கோட்டாட்சியா்களின் உத்தரவின்படி, இடைநீக்கம் செய்யப்பட்டனா்.