தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 01st September 2021 11:00 PM | Last Updated : 01st September 2021 11:00 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு போனஸ், ஊதிய உயா்வு, விபத்தில் பாதிக்கப்பட்டோா்களுக்கு இழப்பீடு, ஊழியா்களுக்கு பாதுகாப்புத் தன்மை உல்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.