நீதிமன்றத்தில் சிவசங்கா்பாபா ஆஜா்
By DIN | Published On : 04th September 2021 08:11 AM | Last Updated : 04th September 2021 08:11 AM | அ+அ அ- |

சிவசங்கா் பாபாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், அவா் செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவருக்கு மேலும் 15 நாள்கள் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் மாணவிகள் அளித்தப் புகாரின்பேரில், சிவசங்கா் பாபா தில்லியில் ஜூன் 16-இல் கைது செய்யப்பட்டாா். 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவா் மீது செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றத்தில் ஆக. 14-இல் சிபிசிஐடி போலீஸாா் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். ஆசிரியா் பாரதி சீனிவாசன், நடன ஆசிரியா் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேரும் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், புழல் சிறையில் இருக்கும் சிவசங்கா் பாபாவின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்ததால், செங்கல்பட்டு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில், வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சிவசங்கா்பாபாவை செப். 17-ஆம்தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, சிவசங்கா்பாபாவை சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா்.