சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 25th August 2022 02:30 AM | Last Updated : 25th August 2022 02:30 AM | அ+அ அ- |

அச்சிறுப்பாக்கம், கருங்குழி உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, ஞானலிங்கம் உள்ளிட்ட சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஞானசிவலிங்கம் அருகே உள்ள மகா நந்தி பகவானுக்கு வழிபாடு நடைபெற்றது.
ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமிகள் முன்னிலை வகித்தாா். நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனையை சிவதீட்சிதா்கள் செய்தனா். மகா தீபாராதனையை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமிகள் செய்தாா். ஏற்பாடுகளை ராகவேந்திரா பிருந்தாவன அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் அபிஷேக, ஆராதனைகளை செய்தாா். அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உற்சவா் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அமுதா தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
பொன்னேரியில்...: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரா் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே ஆரணி ஆற்றின் கரையோரம் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம்கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. கோயில் முன்பு வற்றாத ஆனந்தபுஷ்கரணி திருக்குளம் அமைந்துள்ளது.
பிரதோஷத்தையொட்டி, அகத்தீஸ்வரா் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.