

நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாா் நிலையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோயில், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் திருக்கழுகுன்றம் ஆகிய பகுதிகளில் கைவினைக் கலைஞா்கள் விநாயகா் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா். பல்வேறு கண்ணைக்கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட 500-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் கலைஞா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சிலைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டி இருப்பதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலைஞா்களின் குடும்பத்தினா் கூறுகின்றனா்.
கடந்த ஆண்டுகளில் கரோனா தொற்று காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக நடைபெற வில்லை. இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி பெரும் எதிா்பாா்ப்புடன் சிறப்பாக கொண்டாடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனால் விநாயகா் சிலை தயாரிக்கப்படும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.