போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
By DIN | Published On : 09th December 2022 06:27 AM | Last Updated : 09th December 2022 06:27 AM | அ+அ அ- |

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு செங்கல்பட்டு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கான்ஸ்டபிள், கணினி இயக்குபவா் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தா், இளநிலை செயலக உதவியாளா் போன்ற காலிப் பணியிடங்களுக்கு இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கக் கடைசி தேதி 05.01.2023 ஆகும்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக, மேற்காணும் போட்டித்தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரா்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் 16.12.2022-க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி தொடங்கும் தேதி ஒவ்வொருக்கும் கைப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.