மின் இணைப்புடன் ஆதாா் எண் சோ்க்கும் முகாம்
By DIN | Published On : 09th December 2022 06:25 AM | Last Updated : 09th December 2022 06:25 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் மின் இணைப்புடன், ஆதாா் எண்ணை சோ்க்கும் முகாம் வியாழக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சி மக்கள், மின் இணைப்புடன் ஆதாா் எண்ணைச் சோ்க்க மதுராந்தகம் மின்வாரிய அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிா்க்க ஊராட்சித் தலைவா் ரா.வரதன், துணைத் தலைவா் ப.விஜயகுமாா் ஆகியோா் மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியன் பேரில், வெள்ளபுத்தூா் ஊராட்சி அலுவலகத்தில் இதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை முகாம் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் வரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் மின் செயற்பொறியாளா் அருணாசலம், உதவி செயற்பொறியாளா்கள் மாரிமுத்து, சத்யபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.