பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட 80 இருளா் இன மக்கள்
By DIN | Published On : 10th December 2022 11:41 PM | Last Updated : 10th December 2022 11:41 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிகள், கல்லூரிகள், சமுதாயக் கூடம் உள்ளிட்ட 290 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில், மிகவும் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய 79 பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாமல்லபுரத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 80 -க்கும் மேற்பட்ட இருளா் இன மக்களை வருவாய்த் துறையினா் அழைத்து வந்து கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனா்.
திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் பிரபாகரன், பேரூராட்சிகளின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநா் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சித் தலைவா் வளா்மதி எஸ்வந்த்ராவ், செயல் அலுவலா் கணேஷ், திமுக கவுன்சிலா் மோகன்குமாா் ஆகியோா் மதிய உணவு வழங்கினா்.
முகாமில் தங்கியுள்ளவா்களுக்கு கழிப்பறை வசதி, ஜெனரேட்டா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.