அரசுப் பேருந்து கவிழ்ந்து 18 போ் காயம்
By DIN | Published On : 11th December 2022 11:45 PM | Last Updated : 11th December 2022 11:45 PM | அ+அ அ- |

விபத்தில் சேதமடைந்த அரசுப் பேருந்து.
மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. வந்தவாசியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (47) பேருந்தை ஓட்டினாா். மதுராந்தகம் அருகேயுள்ள கருங்குழி பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 8 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 18 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையிலான போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.