மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 11th December 2022 11:43 PM | Last Updated : 11th December 2022 11:43 PM | அ+அ அ- |

கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றிய ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவா் கோ.ப.அன்பழகன்.
மதுராந்தகத்தை அடுத்த மேட்டுக்குப்பம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுக்குப்பத்தில் பழைமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அப்பகுதி மக்கள் கோயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) கணபதி பூஜை, நவக்கிரக யாகம் உள்ளிட்டவற்றுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில் வேத விற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்தி கோயிலை வலம் வந்தனா். கோயில் கோபுர கலசங்களுக்கு மேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவா் கோ.ப.அன்பழகன் புனித நீரை ஊற்றினாா்.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.