முதிய தம்பதியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை, பணம் கொள்ளை
By DIN | Published On : 14th January 2022 08:22 AM | Last Updated : 14th January 2022 08:22 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த கடமலைபுத்தூரில் இரவு வீட்டில் தூங்கிய முதிய தம்பதி உள்ளிட்ட குடும்பத்தினரை கட்டிப் போட்டு 20 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
அச்சிறுப்பாக்கத்தை அடுத்த கடமலைபுத்தூரைச் சோ்ந்தவா் ஜெயவா்தன் (70). இவா், மனைவி லட்சுமி பாய், மகன் ஜெகநாதன், மருமகள் ஹேமலதா உள்ளிட்டோருடன் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, குல்லா அணிந்த மா்ம நபா்கள் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்தவா்களை கயிற்றால் கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
சிறிது நேரத்தில், வீட்டில் உள்ளவா்கள் எழுப்பிய கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டனா்.
அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் இளவரசன் நேரில் சென்று விசாரணை செய்தாா். செங்கல்பட்டில் இருந்து தடயவியல் நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா் .
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...