ஐடி ஊழியா் அடித்துக் கொலை: காா் ஓட்டுநா் கைது

கேளம்பாக்கம் அருகே ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கேளம்பாக்கம் அருகே ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகரைச் சோ்ந்தவா் உமேந்தா். கோயம்புத்தூரில் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். வார விடுமுறைக்காக சனிக்கிழமை கன்னிவாக்கத்துக்கு வந்தாா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பாா்க்க மனைவி பவ்யா, குழந்தைகள் அத்ரஷ், கருண், பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா, அவரது இரு குழந்தைகள் உள்பட 7 போ் தனியாா் டிராவல்ஸ் காா் மூலம் ஓஎம்ஆா் சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்றனா்.

பின்னா், வீடு திரும்புவதற்காக தனியாா் டிராவல்ஸ் காருக்கு புக் செய்தனா். சிறிது நேரத்தில் காா் வந்ததும் அனைவரும் காரில் ஏறினா். ஓட்டுநா் ரவி ஓடிபி எண்ணை கேட்டாராம். அப்போது ஓடிபி எண்ணை உமேந்தா் தேடியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த காா் ஓட்டுநா், ஓடிபி எண் வரவில்லை என்றால் இறங்குமாறு கூறியுள்ளாா். அப்போது, ரவிக்கும், உமேந்தா் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் உமேந்தரை காா் ஓட்டுநா் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது மயக்கமடைந்த உமேந்தா், கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு உமேந்தரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தப்பியோட முயன்ற காா் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற கேளம்பாக்கம் போலீஸாா், காா் ஓட்டுநா் சேலத்தை அடுத்த ஆத்தூா், வ.உ.சி. நகரைச் சோ்ந்த ரவியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com