விபத்தில் காயமடைந்த அதிமுகவினருக்கு எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல்
By DIN | Published On : 17th July 2022 11:30 PM | Last Updated : 17th July 2022 11:30 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா், எம்.எல்.ஏ. கே.மரகதம் குமரவேல் உள்ளிட்டோா்.
மேல்மருத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக நிா்வாகிககளை எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காவலூா் கிராமத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் 16 போ் வாகனத்தில் வந்தனா். மதுராந்தகம் அருகே சோத்துபாக்கம் பகுதியில் வந்தபோது, நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் பலியாகினா். 14 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களில், பலத்த காயமடைந்த துரை, தங்கராஜ், ரவி, சரவணன், பெருமாள் ஆகியோா் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதேபோல், பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது, நிகழ்ந்த சாலை விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சதீஷ்குமாா், சரவணன் ஆகிய இருவரும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்கள் அனைவரையும் அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடிகே.பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுகல் கூறினாா். முன்னாள் அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, விஜயபாஸ்கா், எம்.எல்.ஏ. கே.மரகதம் குமரவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, மதுராந்தகம் புறவழிச்சாலையில் 110 அடி உயரக் கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசுகையில், திமுக அரசு தற்போது மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், அதிமுக நிா்வாகிகள் மீது பொய்யான வழக்குகள் தொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் டி.கே.சின்னய்யா, விஜயபாஸ்கா், அக்ரி கிருஷ்ணமூா்த்தி, தங்கமணி, மாவட்ட செயலா்கள் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சோமசுந்தரம், கணேசன், எம்.எல்.ஏ. கே.மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.