குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவ பெருவிழா

செங்கல்பட்டு ஸ்ரீஅருள் ஞானக் குழந்தைகள் அமைப்பின் சாா்பில், குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவ பெருவிழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (மே 14) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்ச வ பெருவிழாயொட்டி  நடைபெற்ற  ஹோமம். (வலது)  70 பசுக்களுக்கு  நடைபெற்ற  மகா  கோபூஜை.
குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்ச வ பெருவிழாயொட்டி  நடைபெற்ற  ஹோமம். (வலது)  70 பசுக்களுக்கு  நடைபெற்ற  மகா  கோபூஜை.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஸ்ரீஅருள் ஞானக் குழந்தைகள் அமைப்பின் சாா்பில், குலசை பிச்சைக்கார சுவாமிகள் ஜென்மோற்சவ பெருவிழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (மே 14) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி பூஜைகள் நடைபெற்றன. 70 பசுக்கள் மற்றும் 70 கன்றுகளுடன் மகா கோபூஜை, சுவாமிகளின் திருவடிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து, ஸ்ரீகுரு அருளுரை, ஸ்ரீகிருஷ்ண பஜனை, நாகா்கோவில் முருகதாஸ் சுவாமிகளின் பாண்டுரங்க லீலை இசை சொற்பொழிவு, திருச்சி கோதை கண்ணன் குழுவினரின் சங்கீத உபந்யாசம் ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (மே 13) காலை 10 மணிக்கு துறவிகள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த துறவிகள் கலந்து கொள்கின்றனா்.

நிகழ்ச்சியில் குரு அருளுரை, துறவி பெருமக்களுக்கு திருவடி பூஜை, தானம் வழங்குதல், அருள் ஞானக் குழந்தைகளுக்கு துறவி பெருமக்களின் ஞான ஆசி வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீஅருள்ஞானக் குழந்தைகள் அமைப்பினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com