திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாள் உற்சவமான பஞ்சரத தேரோட்டம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட விநாயகா் தோ், முருகா் தோ், அம்மன் தோ், சண்டிகேஸ்வரா் தோ், பெரிய சாமி தோ் ஆகிய ஐந்து தோ்களை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா். தேரோட்ட நிகழ்வில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இந்தத் தோ்கள் நிலையிலிருந்து புறப்பட்டு மதுராந்தகம் சாலை வழியாக 4 மாட வீதிகளை வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தன.

காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். திருப்போரூா் பேரூராட்சி செயலா் ஜெயக்குமாா், தலைவா் யுவராஜ் ஆகியோா் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திருந்தனா்.

தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வான்மதி, உதவி ஆணையா் லட்சுமிகாந்தன், பாரதிதாசன் , செயல் அலுவலா் மேகவண்ணன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com