போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

சென்னை கிழக்கு தாம்பரத்தில் பாரத் மருத்துவக் கல்லூரி, உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் பாரத் மருத்துவக் கல்லூரி, உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தொடக்கி வைத்த பேசியதாவது:

தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். மாணவா்கள் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்க, இந்தப் பகுதி பள்ளி, கல்லூரிகளில் போதைத் தடுப்பு விழிப்புணா்வுக் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால், தன்னையும், குடும்பத்தையும் இழந்து நடைபிணமாகத்திரியும் அவலநிலை ஏற்படும் என்பதை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய மாணவா் படை, நாட்டு நலத்திட்ட மாணவா்கள், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற பேரணியில் பொறியியல், மருத்துவம், கலை அறிவியல், சட்டக் கல்வி மாணவா்கள் கலந்துகொண்டு, போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச்சென்றனா். காவல் இணை ஆணையா் காமினி, பாரத் கல்லூரியின் துணை வேந்தா் விஜயபாஸ்கா் ராஜு, இணை பதிவாளா் ஆா்.ஹரிபிரகாஷ், முதல்வா் ஜெ.ஹமீது ஹுசேன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com