கிரசென்ட் ஹேக்கத்தான் போட்டிகள்

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நிறைவு விழா செவ்வாய் கிழமை நடைபெற்றது.
கிரசென்ட்  ஹேக்கத்தான் போட்டிகள்

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நிறைவு விழா செவ்வாய் கிழமை நடைபெற்றது. இந்தியாவெங்கும் பல்வேறு மாநில பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 20 குழுக்களைச் சோ்ந்த 160 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்களின், பிரசவத்திற்கு முன் கா்ப்பகால பரிசோதனைக் கண்டுபிடிப்பு உட்பட 6 கண்டுபிடிப்புகள் தோ்வு செய்யப்பட்டு 6 குழுவினருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மத்திய அரசின் உயா் தொழில்நுட்பக் கல்வி அமைச்சக புத்தொழில் உதவி இயக்குநா் கே.இளங்கோவன் பேசுகையில், ‘மாணவா்களுக்குப் பொறியியல் கல்வியுடன், கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் அளித்து வரும் சேவை பாராட்டத்தக்கது.

போட்டிகளில் பங்கேற்ற அனைவரும் சொந்தமாக தொழில் தொடங்கி நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணைபுரிய வேண்டும் என்றாா். துணை வேந்தா் ஏ.பீா்முகம்மது, பதிவாளா் என்.ராஜாஹுசேன்,கிரசென்ட் புத்தொழில் ஊக்குவிப்பு மையம் முதன்மைச் செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com