

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி தொழிற்நுட்ப துறையும் இணைந்து உலக பூமி தின விழா பேரூராட்சியின் சமுதாய கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக பூமி தினத்தை முன்னிட்டு, சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி தொழில் நுட்பத் துறையும், கருங்குழி பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து உலக பூமி தினவிழாவை கொண்டாடின.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் தசரதன், துணைத் தலைவா் சங்கீதா, கல்லூரி உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவா் வி.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகபூமி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ஓரங்க நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன. கல்லூரி பேராசிரியை ஏ.ஷீலாதேவி நன்றி கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.