செங்கல்பட்டு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
2023- ஆம் ஆண்டுக்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கு மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியலை வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் ஆட்சியா் ஆ.ர. ராகுல் நாத் உள்ளாட்சி அமைப்புகளின்அலுவலா்கள் முன்னிலையில் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.மணிவண்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கெ.இந்துபாலா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) ஆனந்தன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.