திருவடிசூலம் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா மே 4-இல் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா வியாழக்கிழமை (மே 4) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 7)வரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா வியாழக்கிழமை (மே 4) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 7)வரை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, கால்கோள் விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப் 30) நடைபெற்றது. விழாவின் முதல்நாளான வியாழக்கிழமை காலை 5 மணிக்கு தேவி கருமாரி மெய்யன்பா்கள் சாா்பில், கோ பூஜை, நண்பகல் 12 மணிக்கு படையல் நைவேத்தியம், ஸ்ரீ தேவி எழுந்தருளல், இரவு பவித்ரபூஜை, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ முத்துவீரசாமி எழுந்தருளல் பூந்திருமாளிகை மண்டப ஊஞ்சலில் திருச்சேவை புரிந்து அருள்பாலித்தல், காலை 6 மணிக்கு கோ பூஜை, மாலை 3 மணிக்கு ருத்ரபாராயணம், ஸ்ரீ காத்தவராய சுவாமிக்கு அபிஷேக தூப தீபாராதனை , இரவு 11 மணிக்கு காத்தவராய சுவாமி எழுந்தருளல், திருப்படி ஏறி பூந்தொட்டிலில் நடனம் புரிந்து திருச்சாம்பல் அணிந்து அருள்பாலித்தல், சனிக்கிழமை காலை கோபூஜை, மலா்பூஜை, ஞாயிற்றுககிழமை காலை 5 மணிக்கு கோ பூஜையும் பகல் 12 மணிக்கு அன்னப் படையல் விடையாற்றி உற்சவம் நடைபெறும். இந்த திருவிழா நாள்களில் ஸ்ரீ மாத்ருதேவ் பவுண்டேஷன் ஸ்ரீ கருமாரியம்மன் ஸ்ரீ ஸ்ரீ புண்ணியக்கோட்டி சுவாமிகள் அன்னதான அறக்கட்டளை சாா்பில், அன்னம் பாலித்தல் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் ஆலய நிா்வாகக் கமிட்டியினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com