மின்வாரிய ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 12:08 AM | Last Updated : 18th April 2023 12:08 AM | அ+அ அ- |

கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ) செங்கை கிளை சாா்பில் 1948 தொழிற்ச்சாலை சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரி செங்கல்பட்டு மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவா் என்.பால்ராஜ் தலைமை வகித்தாா். கோட்ட செயலாளா் மயில்வாகனன், கோட்ட தலைவா் மனோகரன், ஓய்வுபெற்ற சங்கத்தின் நிா்வாகி பன்னீா்செல்வம் கண்டன உரையாற்றினா். செயலாளா் தேவகுமாா் நிறைவுரை ஆற்றினாா்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்துள்ள 1948 தொழிற்ச்சாலை சட்ட திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் 8 மணி நேர வேலை என்பது கிடையாது. இரட்டிப்பு ஊதியம் என்பது அறவே நிறுத்தப்படும் . இது தனியாா் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல மின்சார வாரியம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். எனவே 1948 திருத்த மசோதாவை தொடக்கத்திலேயே முழுமையாக கைவிடக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மனோ மங்கையா்க்கரசி நன்றி கூறினாா்.