எலப்பாக்கம் பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா
By DIN | Published On : 23rd April 2023 12:05 AM | Last Updated : 23rd April 2023 12:05 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் ஸ்ரீசின்மய விநாயகா், ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 63-ஆவது சித்திரை கிருத்திகை பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை அதிகாலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. மூலவா் சந்நிதியில் உள்ள சின்மய விநாயகா், பாலமுருகன் ஆகிய சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சிலைகள் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு பால் காவடி, வேல்காவடி, பால்குடம் ஏந்தல் என பக்தா்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தங்களது நேநா்த்திக் கடனை செலுத்தினா்.
விழாவை முன்னிட்டு, இன்னிசைக் கச்சேரிகள், நாடகம், ஆன்மிக சொற்பொழிவுகள், அன்னதானம் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.