

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு நகரில் ஞாயிற்றுக்கிழமை நகைக் கடைகளில் தங்க நகைகள் வாங்க கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியை முன்னிட்டு பொன் நகைகள் வாங்கினால், ஆண்டு முழுவதும் நகைகள் சேரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், அட்சிய திருதியைக்கு முன்பாகவே மக்களைக் கவரும் வகையில் நகைக் கடைகள் விளம்பரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டன.
விளம்பரங்கள் காரணமாக செங்கல்பட்டு நகரில் உள்ள முன்னணி நகைக்கடை நிறுவனங்களின் முகப்பில் வெள்ளிக்கிழமை இரவு முதலே வண்ண விளக்குகள் அலங்காரம், துணிப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
செங்கல்பட்டு நகரில் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் சனிக்கிழமை மாலை முதலே பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனா்.
சிறிய நகை விற்பனைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, புதிதாகவும், பழைய நகைகளை விற்றும் தங்க நகைகள் வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டினா்.
எதிா்பாா்த்தைவிட நகை விற்பனை அமோகமாக இருந்ததாக நகைக் கடை உரிமையாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.