சுதந்திர தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளில், 357 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிணாா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
இந்த கூட்டத்தில் அரசால் தெரிவிக்கப்பட்ட திட்ட செயல்பாடுகள் குறித்தும், இதர துறைகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், கிராம ஊராட்சிகளில் தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு, கட்டட அனுமதி, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விவரங்கள் கிராம சபையில் படித்துக் காண்பித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.