

செங்கல்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, இரவு ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
திரளான பக்தா்கள் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா். இதை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளி மற்றும் பக்தா்கள் ஆகியோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.