

செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆங்கில புத்தாண்டையொட்டி, கோ பூஜை, ஹோமம் , விநாயகா், 51 அடி உயர அம்மன், சொா்ணாம்பிகை அம்மன், சா்வதேச கரிய நாக் சொரூபிணி அம்மன் வாராகி, துா்காதேவி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதேபோல், ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும், 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரைமுத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். இதேபோல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் விநாயகா், முருகா் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
இதேபோல், வல்லம் குடைவரை கோயில் வேதாந்தீஸ்வரா் கோயிலில் புத்தாண்டு படி பூஜை, புலிப்பாக்கம் வியாபாரப்பரீஸ்வரா் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில், திருப்போரூா் கந்தசாமி கோயில், சிங்கப்பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரா் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில், ஸ்ரீ ஐயப்பன் கோயில், செம்மலை வேல்முருகன் கோயில், இருங்குன்றம் பள்ளி பாலமுருகன் கோயில், செம்பாக்கம் மகா திரிபுரசுந்தரி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.