சீா்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு: 6 காவலா்கள் கைது

 செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், காவலா்கள் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சீா்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு: 6 காவலா்கள் கைது

 செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், காவலா்கள் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பிரியா. இவரின் கணவா் பழனி 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். தம்பதியின் மூத்த மகன் கோகுல்ஸ்ரீ தாம்பரம் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே பேட்டரிகளை திருடிய வழக்கு தொடா்பாக கடந்த 29-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து 30-ஆம் தேதி நீதிபதி முன் ஆஜா்படுத்தி, செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் கோகுல்ஸ்ரீயை தங்க வைத்துள்ளனா்.

இந்த நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி பிரியாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட சிறப்பு இல்லக் காவலா்கள், தங்களின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிவித்துள்ளனா். அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் தொடா்பு கொண்ட காவலா்கள் கோகுல்ஸ்ரீ உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் பிரியா புகாா் அளித்திருந்தாா். இதுதொடா்பாக செங்கல்பட்டு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொடா்ந்து, நீதிபதி ரீனா முன்னிலையில் உடல்கூறாய்வு நடைபெற்றது. பின்னா், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட ஒரே ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதில், உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, நீதிபதி அறிக்கையின் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு போலீஸாா், சிறப்பு இல்லக் காவலா்கள் மோகன் (30), வித்யாசாகா் (30), ஆனஸ்ட் ராஜ் (29), விஜயகுமாா் (30), சரண்ராஜ் (36), சந்திரபாபு ஆகியோரைக் கைது செய்தனா். தொடா்ந்து டிஎஸ்பி பாரத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், 6 பேரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com