

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் 51 அடி உயர தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் காணும் பொங்கலையொட்டி உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
இந்தக் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பசுக்களுக்கு மாட்டுப் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. கோயில் ஸ்தாபகா் குகயோகி மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மேலும் காணும் பொங்கலையொட்டி திரளானோா் வருகை தந்தனா்.
கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 51 அடி உயர கருமாரியம்மன், 18 அடி உயர சிரஞ்சீவி ஆஞ்சநேயா், பைரவா், ஸ்ரீ வாரு வேங்கடேசப்பெருமாள் சன்னிதி மற்றும் 108 திவ்ய தேசங்களையும் மக்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனா்.
கோயில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சூலத்துக்கு பக்தா்கள் வழிபாடு செய்தனா். ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் ஆலய அறக்கட்டளை சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகா் மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்தனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.