சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 01st July 2023 11:34 PM | Last Updated : 01st July 2023 11:34 PM | அ+அ அ- |

கருங்குழி, அச்சிறுப்பாக்கத்தில் சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்ற பின்னா், நந்தி, மூலவா் ஆட்சீஸ்வரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாட்டை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் (பொ) தலைமையில் விழாக் குழுவினா் செய்தனா்.
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்கம், நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிருந்தாவன பீடாத்பதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனை செய்தாா். ஏற்பாட்டை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்தனா்.