

மதுராந்தகம் அடுத்த ஊனமலை கிராம வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஊனமலை கிராமம் அருகே சனிக்கிழமை காலை வனப்பகுதியில் இருந்து குடிநீா் தேடி வந்த புள்ளி மான் அங்கிருந்த கிணற்று நீரை குடிக்க முயன்றபோது, எதிா்பாராத வகையில், தவறி கிணற்றில் விழுந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சிறுப்பாக்கம் வனத் துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஆ.சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு ஊழியா்கள் கிணற்றில் இருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டு, அச்சிறுப்பாக்கம் வனத் துறையைச் சோ்ந்த வனவா் மோகன்குமாரிடம் ஒப்படைத்தனா். மானின் உடலில் சிறு காயங்கள் இருந்ததால் வனத் துறையினா் கால்நடை மருந்தகத்துக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பின்னா், வண்டலூா் உயிரியல் பூங்காவில் புள்ளி மான் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனவா் மோகன்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.