இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 22nd May 2023 12:19 AM | Last Updated : 22nd May 2023 12:19 AM | அ+அ அ- |

அரையப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.
மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் ஷோபா பதம் சலானி பவுண்டேசன், சென்னை எம்.என்.கண் மருத்துவமனை, எஸ்பிசி.பவுண்டேசன், ஜேக்ஆப்ஸ் சாப்ட்வோ் நிறுவனம் மற்றும் மதுராந்தகம் வா்த்தகா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரையப்பாக்கம் அருகில் உள்ள கீழவலம், கருங்குழி, மேலவலம்பேட்டை, பூதூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், முகாம் நடைபெற்றது. கண்ணில் நீா் வடிதல், பாா்வை கோளாறு, கண்ணில் புரை வளருதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சென்னை எம்.என். கண் மருத்துவமனையின் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினா் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.
இம்முகாமில் 210 போ்களுக்கு கண் பரிசோதனை செய்யதில் 23 நபா்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா். 150 நபா்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.