தாழம்பூா் த்ரிசக்தி அம்மன் கோயில் அறங்காவலா் டாக்டா் கே.கே. கிருஷ்ணன்குட்டியின் தாயாா் மருத்துவாச்சி குஞ்சம்மாளின் 28-ஆவது ஜீவசமாதி தினத்தையொட்டி அவரது சிலைக்கு லட்சமலா் புஷ்பாஞ்சலி புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டத்தில் உள்ள இக்கோயில் வளாகத்தில் மருத்துவச்சி குஞ்சம்மாளுக்கு சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. மருத்துவச்சி குஞ்சம்மாளின் 29-ஆவது ஜீவசமாதி தினத்தையொட்டி, த்ரிசக்திஅம்மன் கோயில் பின்புறம் அமைந்துள்ள குஞ்சம்மாளின் சிலைக்கு கிருஷ்ணன் குட்டி சுவாமிகள், குடும்பத்தினா், பக்தா்களுடன் இணைந்து லட்ச மலா்களைக் கொண்டு லட்சாா்ச்சனை செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபாடு நடைபெற்றது. இதே போல் சுவாமிகளின் சொந்த ஊரான கேரள மாநிலம், பாலக்காடு முண்டூா் கணக்கு பரம்பில் உள்ள குஞ்சம்மாளின் ஜீவசமாதியில் அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.