

திருக்குறள் முற்றோதல் செய்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 15 மாணவா்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் முற்றோதல் செய்யும் மாணவா்களுக்குப் பரிசுத் தொகையா ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.
நிகழ் 2022-2023-ஆம் நிதியாண்டிலிருந்து இந்த பரிசுத் தொகையானது ரூ.15,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவா்களுக்கு (1. க.ம.திவ்யதா்ஷினி, 2. நா.காவ்யஸ்ரீ, 3.செ.கனிஷ்கா, 4. மு.ரெ.ரஃபா, 5. ரா.நீரஜா, 6. உலோ நேத்ரா, 7. மு.பி.இனியன், 8. இரா.தாரனேஷ்வா், 9. ந.நமிபி கோவிந்தன், 10. ந.லேகா தமிழ்தனம், 11. சு.லோகேஷ், 12.சாலைசனாதனன், 13. வி.தருண், 14.கு.சாய்ராம், 15.தி.ஸ்ரீநிவாஸ்) ரூ.15,000-க்கான காசோலையையும், முதல்வா் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் அரசாணையையும் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆர.ராகுல்நாத் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா்(மு.கூ.பொ) க.பவானி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.