செங்கல்பட்டு அருகே மறைமலை நகா் கடம்பூா் கிராமத்தில் ரூ.300 கோடியில் 137.65 ஹெக்டோ் பரப்பளவில் லண்டன் கியூ பூங்கா மாதிரியில், உலகத் தரத்தில் புதிய பல்லுயிா் பண்பு பாதுகாப்பு பூங்கா அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது வனத் துறை அலுவலா்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடா்ந்து செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட கூடலூா் அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சி ஆணையா் சௌந்தரராஜன், மறைமலை நகா் நகராட்சி நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், துணைத் தலைவா் சித்ரா கமலக்கண்ணன், மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதேபோல், மறைமலை நகா் நகராட்சிக்குட்பட்ட வல்லாஞ்சேரியில் மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பாலம் அமைக்க அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.