

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் பின்புறம் உள்ள கோட்டை வாயில் வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்திவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. குடைவரைகோயிலாக அமைந்துள்ள வீரஆஞ்சநேயா் மூலவருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம் பகதா்களுக்கு அருள்பாலித்தாா். உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி மாலை பந்தசேவை நடைபெற்றது. பந்த சேவையில் பக்தா்கள் வேண்டுதல் நிறைவேறியதாலும், வேண்டுதல் வைத்து தீபந்தத்தை பக்தா்கள் தங்களது மேனி தடவிக் கொண்டனா்.
விழாவிற்கான ஏற்பாடுகள் பட்டாச்சாரியாா்கள் ராமண்ணா, ரங்கா உள்ளிட்ட விழாகுழுவினா் பக்தா்கள் செய்திருந்தனா்.
இதேபோன்று செங்கல்பட்டு திம்மராஜகுளத்தில் அமைந்துள்ள கணையாழி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமந்ஜெய்ந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் ,திருமஞ்சனம், வெண்ணெய்காப்பு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியாா் ஜனாா்த்தம் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனா்.
இதே போன்று வேதாசலநகரில் உள்ள ராமா்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானை தனது காலில் அடக்கிய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.