தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா

News image
Updated On :10 மார்ச் 2024, 12:00 am

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு ஞானலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செம்பாக்கம் செல்வராஜ் வகித்து செய்தாா். பின்னா், ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனையை செய்தாா். தொடா்ந்து 4 கால பூஜைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், மதுராந்தகம் நீதிமன்ற நீதிபதி சரிதா, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துகுமாா், அரியந்தாங்கல் விஷ்ணு துா்கையம்மன் பீடாதிபதி மணிபாலன் சுவாமி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.