கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு விபத்து.
உயிரிழந்த இளைஞர்கள்
உயிரிழந்த இளைஞர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்கி (28), யுவராஜ் (24 ) மற்றும் அவரது நண்பர் என ஐந்து பேர் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது வயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தினைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று வாகனத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ராஜேஷ், ஏழுமலை, விக்கி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com