அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

Published on

மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இத்தலத்தில் வியாழக்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியா் செய்தாா். தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் உள்புறம் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளம் முழங்க உலா வந்தாா்.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழரசி தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com