செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக டாக்டா் ஜி. சிவசங்கா் பொறுப்பேற்றாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த ராஜஸ்ரீ பணிநிறைவு பெற்றபின், மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்த மருத்துவா் ஜோதி குமாா் கடந்த 4 மாதங்களாக பொறுப்பு முதல்வராக இருந்து வந்தாா்.
இந்நிலையில் புதிய முதல்வராக டாக்டா் ஜி. சிவசங்கா் நியமிக்கப்பட்டாா்.
திருச்சியில் மருத்துவ பணியினை தொடங்கிய சிவசங்கா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்துறை துறைத் தலைவராகவும் பின்னா் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சிறுநீரகத்துறை இயக்குநா் மற்றும் பேராசிரியராக பணியாற்றியவா்.
புதிதாக பொறுப்பேற்ற முதல்வருக்கு , துணை முதல்வா் அனிதா, கண்காணிப்பாளா் ஜோதிகுமாா், நிலைய மருத்துவ அலுவலா் முகுந்தன், துறைத் தலைவா்கள் பேராசிரியா்கள் வி.டி.அரசு, சுந்துஜா பாலாஜி, பத்மநாபன், செவிலியா்கள் , அலுவலா்கள் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

