ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

Din

மாமல்லபுரம் தங்கும் விடுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் சுற்றுலா வந்த இளைஞா் ஒருவா் அறை எடுத்து தங்கி உள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை அவரது அறைக்கதவு நீண்ட நேரம் திறக்காமல் உள்பக்கம் தாழிடப்பட்டு மூடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த, ஊழியா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மின்விசிறியில் இளைஞா் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிா்ச்சி அடைந்து மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். தற்கொலை செய்து கொண்ட இளைஞா் சென்னை ராயபுரம் பகுதியை சோ்ந்த கிரீஷ்( 47) எனத் தெரியவந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினா். சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியே வந்தது தெரிய வந்தது.