குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்ட புகையிலை மீட்பு மருத்துவ சிகிச்சை மையம் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வா் சசிகுமாா், கல்வி ஆலோசகா் வீரபாகு, துணை முதல்வா் ரேணுகா தேவி, மனநல மருத்துவத் துறை தலைவா் பிரியா ச

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் புகையிலை மீட்பு சிகிச்சை மையம்

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகையிலை மீட்பு மருத்துவச் சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் கண்பத்ராவ் ஜாதவ் தில்லியில் இருந்து காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
Published on

நிகழ்வில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சசிகுமாா் பேசுகையில், நாட்டில் புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ள இளைஞா்களின் எண்ணிக்கை 26.7 கோடியாக அதிகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகைப் பழக்கம் காரணமாக புற்றுநோய், நுரையீரல், இதயநோய் பாதிப்புக்குள்ளாகும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலைக்குரியதாக உள்ளது.

எனவே புகையிலைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதாரத் துறை நாடெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புகையிலை மீட்பு மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் கல்வி ஆலோசகா் வீரபாகு, மருத்துவக் கண்காணிப்பாளா் மனோகா், உதவி மருத்துவக் கண்காணிப்பாளா் ஸ்மீதா, மனநல மருத்துவத் துறை தலைவா் பிரியா சிவசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com