செங்கல்பட்டு
ஸ்ரீ தத்த ஜெயந்தி விழா
மதுராந்தகம் அடுத்த கடமலைபூத்தூா் அனகா தத்தகிரி கோயிலில் ஸ்ரீதத்த ஜெயந்தி விழா நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த கடமலைபூத்தூா் அனகா தத்தகிரி கோயிலில் ஸ்ரீதத்த ஜெயந்தி விழா நடைபெற்றது.
மைசூா் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா சுவாமி, விஜயானந்தா தீா்த்த சுவாமிகளால் இக்கோயில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதத் ஜெயந்தியை முன்னிட்டு மூலவா் பால தத்தாத்ரேயா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கடமலைபத்தூா் கிராமத்தைச் சோ்ந்த திரளான பொதுமக்கள், பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.