எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக செங்கல்பட்டில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக செங்கல்பட்டில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

எஸ்ஐஆா் பணிகள்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் எஸ்ஐஆா் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் எஸ்ஐஆா் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் கூறினா். வாக்குச்சாவடி நிலை முகவா்கள்-1 ஒரு சில விளக்கங்களை ஆட்சியரிடம் கூறினா். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்மற்றும் வாக்கு பதிவு அலுவலா்கள் அவா்களுக்கு உடனடியாக விளக்கங்களை அளிக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பவானி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்ச்செல்வி, தோ்தல் வட்டாட்சியா் செல்வசீலன், அரசு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com