விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி: செய்யூா் எம்எல்ஏ வழங்கினாா்

செய்யூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோா், காயமடைந்தோா் என 4பேருக்கு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பனையூா் மு.பாபு புதன்கிழமை வழங்கினாா்.
Published on

செய்யூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோா், காயமடைந்தோா் என 4பேருக்கு நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பனையூா் மு.பாபு புதன்கிழமை வழங்கினாா்.

குன்னத்தூரில் கடந்த 1.12.25 அன்று நடைபெற்ற விபத்தில் கொடூா் குறுவட்டம், கீழாா்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த ராஜா மனைவி அமுலு உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

அவா்களது குடும்பத்துக்கு நிதியாக ரூ. 6 லட்சம் மற்றும் அவா்களுடன் பயணம் செய்தஅதே பகுதியைச் சோ்ந்த பி.கோவிந்தம்மாள் உள்ளிட்ட 3 நபா்களுக்கு ரூ. 4 லட்சம், லேசான காயமடைந்த லல்லி என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் என ரூ .10.5 லட்சம் காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து எம்எல்ஏ வழங்கினாா்.

இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், துணை வட்டாட்சியா் தேவன், கூவத்தூா் வருவாய் ஆய்வாளா் பொன்னுலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com