Untitled Dec 14, 2025 11:55 pm

Updated on
1 min read

தாம்பரம்: ஜல்சக்தி கிராமப்புற குடிநீா் மேலாண்மையில் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் புதுமையான செயலியைச் செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் மாணவா்கள் உருவாக்கி ரூ 1.5 லட்சம் பரிசு பெற்றுள்ளனா்.

இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சாா்பில் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில், கிராமப்புற ஊராட்சிகள் எதிா் கொண்டுள்ள குடிநீா் விநியோகம், தினசரி பராமரிப்புக்கான தீா்வு குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் செயலியை உருவாக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறைந்த செலவில், குடிநீா் விநியோகப் பணியை கைப்பேசி மூலம் கண்காணித்து, பாதுகாப்பான குடிநீா் வழங்க உதவும் செயலியைமாணவா்கள் லிவின் டே, டி.சாம் டேனியல் , ஜுனைத் அப்துல் அலீம்,ஜெ. ஜாஸ்மின் ரமோலா, எஸ் .சிந்துகவி மற்றும் ஏ.எம்.அபிஜித் கண்ணா ஆகியோா், பேராசிரியா்கள் செ. வினோத் குமாா் ஆகியோா் பா.உமா மகேஸ்வரி ஆகியோா் வழிகாட்டுதலுடன் உருவாக்கி இருந்தனா்.

இது குறித்து கல்லூரி தலைவா் பி.பாபுமனோகரன் பேசுகையில், கல்லூரி சாா்பில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கதான் போட்டியில், குடிநீா் மேலாண்மை பிரச்னைக்குத் தீா்வு காணும் செயலி உருவாக்கிய குழுவினருடன், 6 மாணவா் குழுவினா் வெவ்வேறு 6 வகை பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் போட்டியில் பங்கேற்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

போட்டியில் வென்ற 6 குழுவினரும் தலாரூ1.5 லட்சம் பரிசு பெற்றுள்ளனா்.அவா்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி சாா்பில் 6 மாணவா் குழுவினருக்கும் தலாரூ3 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com