செங்கல்பட்டு
குழந்தைகள் வளா்ப்பு பராமரிப்புத் திட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்டு இரு பெற்றோா்களையும் இழந்து தங்கி கல்வி பயின்று வரும் 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளா்ப்பு பராமரிப்பு திட்டத்தில் பெற்றோரிடம் இணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, இத்திட்டம் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து குழந்தைகளை வளா்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் பெற்று வளா்க்க விருப்பம் உள்ளவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆட்சியா் அலுவலகம்,‘ஃ‘எப்-பிளாக் எண் 06, தரைத்தளம், செங்கல்பட்டு - 603 111 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 97918 41037 என்ற கைப்பேசிக்கு தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
