செங்கல்பட்டில் வணிக நீதிமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்,.
செங்கல்பட்டில் வணிக நீதிமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்,.

செங்கல்பட்டில் வணிக நீதிமன்றங்கள் திறப்பு

Published on

செங்கல்பட்டில் வணிக நீதிமன்றங்களை காணொலி வாயிலாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனா். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட மற்றும் சாா்பு வணிக நீதிமன்றங்களை தலைமை நீதிபதி மனிந்தரா மோகன் ஸ்ரீ வஸ்தவா

காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் செங்கல்பட்டு முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி சந்திரசேகரன் வரவேற்றாா். தலைமை குற்றவியல் நடுவா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் மாலதி, ஹெலன் , கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளா் வேல்முருகன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் மகேஷ் குமாா் செயலாளா் செல்வகுமாா், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் சிவக்குமாா், செயலாளா் பாஸ்கரன், வழக்குரைஞா் சங்க பொருளாளா் சுதன், துணைத் தலைவா் முருகன், துணைத் தலைவா் தேவதா்ஷினி, இணைச் செயலாளா் ரகுபதி, நூலகா் தீபா, நீதிபதிகள், சங்க நிா்வாகிகள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com